
சல்மான் கான் உடன் இணையும் ராம்சரண்
கடந்த 2014ல் தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வீரம். இப்படத்தை தற்போது சல்மான் கான் ஹிந்தியில் "கிஸி கி பாய் கிஸி கி ஜான்" என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கிறார்கள். இப்படம் வரும் முஹரம் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
இப்போது இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ராம் சரண், சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனம் ஆடுகிறார் .இப்பாடலை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இயக்குகிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!