
ரயில் படிக்கட்டில் பயணம்: சோனு சூட்டுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
இந்த வீடியோவுக்கு வட இந்திய ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது தனது பதிவில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை ரயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “இது மிகவும் ஆபத்தான பயணம் . இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம். படங்களில் வேண்டுமானால் ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சோனு சூட் தனது பதிவில் “எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் எண்ணம் எதுவும் இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களது கஷ்டத்தை உணர்ந்து பார்க்கவே சிறிது நேரம் அந்த பயணத்தை மேற்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!