
பதான் புரமோசன் நிகழ்ச்சியில் தாக்குதல்: ஷாருக்கான், தீபிகா பேனர்கள் கிழிப்பு
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்கு அங்கிருந்த பேணர்களை கிழித்து எரிந்தனர். விளம்பர ஆர்ச்சுகளை உடைத்து எரிந்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு குஜராத் தியேட்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் காத்ரி தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!