
அடுத்தடுத்து மாரடைப்பு: 24 வயது பெங்காலி நடிகை மரணம்
கடந்த நவம்பர் 1ம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இருந்த நிலையில் இன்று (நவ.,20) அவர் உயிரிழந்தார்.
துவக்கத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமான ஜந்த்ரிலா சர்மா, தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்தார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!