
மோசடி வழக்கில் சன்னி லியோன் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் தடை
சினிமாவில் நடிப்பது தவிர மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். அதன்படி கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட ஒத்துக் கொண்டு 20 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதற்கு காரணம் சன்னி லியோன்தான் என்றும் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் மீது கேரள உயர்நீதி மன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை சன்னி லியோன் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!