
ரூ.65 கோடிக்கு வீடு வாங்கிய ஜான்வி கபூர்
மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மெண்டில் அவர் வீடு வாங்கவில்லை, முதல் தளம், இரண்டாவது தளத்தை அப்படியே வாங்கி உள்ளார். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல உள்ளுக்குள்ளேயே தனி படிக்கட்டு, லிப்ட் வசதி கொண்டது.
அதோடு நீச்சல் குளம், ஜிம், பார், மினி பார்க் உள்ளிட்ட வசதிகளை கொண்டது. மொத்தம் 6 ஆயிரத்து 421 சதுடி கொண்டது இந்த தளங்கள். இதன் பத்திர பதிவு சமீபத்தில் நடந்தது. அதற்கான முத்தரைதாள் மட்டும் 3 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். தற்போது அந்தேரி பகுதியில் வசித்து வரும் ஜான்வியின் குடும்பம் விரைவில் இந்த வீட்டில் குடியேற இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!