
காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளருடன் புஷ்பா இயக்குனர் கூட்டணி
இந்தநிலையில் இவர்களது கூட்டணியில் புஷ்பா படத்தின் இயக்குனரான சுகுமாரும் கைகோர்த்துள்ளார். அது இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிப்பதற்காகவா அல்லது அந்தப் படத்தை இயக்குவதற்காகவா என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இவர்களது சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த தகவலை காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, “சுகுமார் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி என்கிற இரண்டு பிளாக்பஸ்டர் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.. இந்திய சினிமா எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!