
தேர்தலில் போட்டியிடத் தயார் : கங்கனா
இந்த நிலையில் நான் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று கங்கனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 2024 தேர்தலில் போட்டியிட நான் தயார். என் எண்ணங்களோடு ஒத்துப்போகிற பாஜக சீட் கொடுத்தால் அதற்கு நான் தயார். ஏனெனில் அனைத்து வகையான பங்கேற்பையும் விரும்புபவள் நான். கடினமாக உழைக்க கூடிய மற்றவர்களும் இது போன்ற பணிகளில் ஈடுபட முன்வர வேண்டும். இமாச்சல பிரதேச மக்கள் விரும்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி, கங்கனாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க முன்வந்தபோது அதனை கங்கனா மறுத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மக்கள் மூலம் பார்லிமென்ட் செல்லவே விரும்புவதாக கூறுகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!