
ஒரு பாடலுக்கு ஆடிய ஸ்ரத்தா கபூர்
இந்த நிலையில் பாலிவுட்டில் தயாராகி வரும் ஹாலிவுட் பாணியிலான ஓநாய் மனிதனை பற்றிய படமான பெடியா படத்தில் ஆடியுள்ளார். வருண் தவான் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தயாரிப்பில் உருவாகும் படம் இது.
இதில் தும்கேசரிஞ் என்று தொடங்கும் பாடலில் ஆடியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் - கீர்த்தி சனோன் ஆகியோருடன் ஸ்ரத்தா கபூர் ஆடியுள்ளார். சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார்.
இயக்குநர் அமர் கவுஷிக்கின் முந்தைய படமான "ஸ்திரீ" யில் ஷ்ரத்தா கபூர் ஏற்கெனவே ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!