
பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை வாங்க தயக்கம்
அவரது காலத்தில் கிளாமர், கவர்ச்சி என இளம் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். சில பல காதல்களால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கடந்த 2005ம் ஆண்டு அவரது மும்பை பிளாட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவரது மரணம் பற்றி தெரிய வந்தது.
மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் உள்ள ரிவியரா பில்டிங்கின் 7வது மாடியில் அவருக்குச் சொந்தமான அந்த பிளாட் உள்ளது. அதை விற்பதற்கு தற்போது முயன்று வருகின்றனர். ஆனால், அந்த பிளாட்டை வாங்க யாரும் முன் வரவில்லையாம். பர்வீன் பாபி உடல்நலக் குறைவால் இயற்கையாக மரணம் அடைந்தாலும் அந்த வீட்டில் “ஏதோ ஒன்று” இருப்பதாக பயந்து வாங்க மறுக்கிறார்களாம். இது பற்றிய செய்திகள் மும்பை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலைக்கு என்றால் 15 கோடியும், வாடகைக்கு என்றால் மாதம் 4 லட்ச ரூபாயும் என்று புரோக்கர்கள் நிர்ணயித்துள்ளார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!