
விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான், ஷாருக்கான்
மும்பையில் தனது தங்கை அர்பிதா வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியில் சல்மான்கான் கலந்து கொண்டார். மேலும் விநாயகர் சிலைக்கு முன்பாக நின்று சூடம் ஏற்றிய தட்டுடன் ஆரத்தியும் சுற்றி காட்டினார் சல்மான்கான். இதுகுறித்த வீடியோவையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சல்மான் கான்.
இவரது தந்தை சலீம்கானின் முதல் மனைவி சல்மா மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இந்து மற்றும் இரண்டாவது மனைவி முன்னாள் நடிகையான ஹெலன் ஒரு கிறிஸ்தவர் என்பதால் இவர்களது குடும்பத்தில் ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ், விநாயகர் சேர்த்து என அனைத்து மதத்திற்கான பண்டிகைகளும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்களாம்.
ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் விநாயர் சிலையை அலங்கரித்து சதுர்த்தியை கொண்டாடி இருக்கிறார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "கணபதிஜியை வீட்டிற்கு வரவழைத்தோம். கற்றல், கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" என எழுதியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!