
நிர்வாண படங்கள் வெளியீடு: ரன்வீர் சிங்கிடம் 2 மணி நேரம் ரகசிய விசாரணை
இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ரன்வீர் சிங்கிற்கு செம்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து ரன்வீர் சிங் தனது வழக்கறிஞருடன் போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ரகசிய விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும், எப்ஐஆரும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். கோர்ட் வழிகாட்டுதல்படி தேவைப்பட்டால் ரன்வீர் சிங் கைது செய்யப்படலாம். முதல்கட்ட விசாரணை முடிந்தாலும் தேவைப்டும் பட்சத்தில் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!