
அமிதாப்புக்கு அமெரிக்காவில் வீட்டு வாசலில் உருவச்சிலை அமைத்த ரசிகர்
இது குறித்து, கோபி சேத் கூறியதாவது:அமிதாப், எனக்கும் என் மனைவிக்கும் கடவுளைப் போன்றவர். சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகப் பெரிய ஸ்டார்.தன் ரசிகர்கள் மற்றும் அனைவருடனும் மிக எளிமையாக பழகுபவர். தன்னுடைய வாழ்க்கை வாயிலாக, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறார். இதனால், அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து, அதை நிறைவேற்றி உள்ளேன். இந்த சிலை ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. நான் வீட்டு வாசலில் சிலை வைப்பது, அமிதாப்புக்கு தெரியும். ஆனால், "நான் இதற்கு தகுதியானவன் அல்ல" என, அவர் பணிவுடன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!