
தங்கப்பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அம்ரிந்த்பால் அகில இந்திய பெண்கள் கராத்தே போட்டியில் தங்கபதக்கத்துடன் சேம்பியன் ஆனார். பதக்கம் பெற்ற உடனேயே நடிகர் சோனுசூட்டை சந்தித்து அவரிடம் பதக்கத்தை வழங்கினார். இந்த நிகழ்வால் நெகிழ்ந்த சோனுசூட்
இதுகுறித்து கூறியிருப்பதாவது: மற்றவர்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை காணும் போது நம் வாழ்க்கையும் மதிப்புக்கு உள்ளாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்ரிந்த்பால் என்ற கராத்தே வீராங்கனை முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அவர் பல கனவுகளுடன் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
இதனையடுத்து அவருடைய கால் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து கையில் தங்கப் பதக்கத்துடன் என்னை வந்து சந்தித்தபோது, அவர் மீதான மதிப்பு எனக்கு மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் பர்மிங்காமில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் விளையாட உள்ளார், அவர் இந்தியாவை மென்மேலும் பெருமைப்படுத்துவார் என்றும் நான் நம்புகிறேன் . இவ்வாறு சோனுசூட் தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!