
பாலிவுட் கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல்
உர்பி ஜாவேத் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு லட்சக் கணக்கில் பாலோயர்ஸ்களை வைத்துள்ளார். அவ்வப்போது அதிரடியான கருத்துக்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறான கருத்து ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் உர்பி ஜாவேத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இன்னும் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள உர்பி ஜாவேத், "நீங்கள் உங்களது நேரத்தை சிறையில் அனுப்பவிக்க வேண்டியிருக்கும்" எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பதிவுகளை ஸ்கீரின் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தனக்கு எதிராக வரும் கொலை மிரட்டல் பதிவுகள் குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!