
தெலுங்கிற்கு பை பை சொல்லும் ஆலியா பட்
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான "கங்குபாய் கத்தியவாடி" படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!