
நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
சில நாட்களுக்கு முன்பு மிதுன் சக்ரவர்த்திக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை மிதுன் சக்ரவர்த்தியின் மகனும் நடிகருமான மஹாய் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மிதுன் சிகிக்சை பெறும் படமும் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!