
ராம்கோபால் வர்மாவின் வெப் சீரிசில் இஷா கோபிகர்
இதில் இஷா கோபிகர், அஞ்சனா சின்ஹா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நைனா கங்குலி நக்சலைட்டாக நடித்துள்ளார். அபிஷேக் துஹான், ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் சவுத்ரி, நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
தொடர் குறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது நான் இயக்கும் முதல் ஓடிடி தொடர். மகாத்மா காந்தி சொன்ன "கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்", மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட "பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி" என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. இது வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது. என்கிறார் வர்மா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!