
இருபது கோடி சன்மானத்தை மறுத்த சல்மான் கான்
இந்த படத்தில் சிரஞ்சீவியின் பாடிகார்டாக நடிக்கும் நபர் யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதில் ராம்சரண் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த கதாப்பாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
தற்போது அவர் சிரஞ்சீவி உடன் காட்பாதர் படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு இந்த படத்தில் சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தான் நட்புக்காக தான் நடிப்பதாகவும், அதனால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன் என சல்மான் கான் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் டோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!