
தந்தையின் நினைவாக மாளிகை கட்டிய நவாசுதீன் சித்திக்
உத்தர பிரதேச மாநிலம் புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே பிரமாண்ட மாளிகை ஒன்றை கட்டினார். அவரது நேரடி பார்வையிலும் அவரது ஆலோசனைப்படியும் இந்த மாளிகை உருவானது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த மாளிகை இப்போது திறக்கப்பட்டு விட்டது.
இதற்கு "நவாப் பங்களா" என்ற பெயர் சூட்டி உள்ளார். தனது புதிய பங்களாவின் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நவாசுதீன் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவனது உள்ளதில் உள்ள தூய்மைதான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!