
15 நிமிட காட்சிக்கு அஜய் தேவ்கானுக்கு 35 கோடி சம்பளம்
400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்தவர்களுக்கான சம்பளம் பற்றிய தகவல்கள் பரவி வருகிறது. படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு தலா 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தை இயக்கிய ராஜமவுலிக்கு 75 கோடி சம்பளம் என்கிறார்கள்.
இதுதவிர கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு 35 கோடி சம்பளம் வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அஜய்தேவ்கான் வரும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இதேபோல் இந்த படத்தில் 20 நிமிட காட்சிகளில் வரும் ஹிந்தி நடிகை அலியாபட் ரூ.9 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
படம் பாலிவுட்டிலும் வெளிவருவதால் பாலிவுட் நடத்திரங்கள் இருந்தால்தான் படத்தின் வியாபார மதிப்பு உயரும் என்பதால் இத்தனை சம்பளம் கொடுக்கபட்டிருக்கிறதாம். சமுத்திரகனிக்கு 2 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 65 சதவீதம் சம்பளமாக தரப்பட்டிருக்கிறதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!