
பெர்லின் திரைப்பட விழாவில் ஆலியா பட் படம்
இந்த படம் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: கங்குபாய் கத்தியவாடியின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நானும் எனது குழுவினரும் இந்த கனவை சாத்தியமாக்குவதற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளோம். மதிப்புமிக்க பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்தைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். என்கிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா பென் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படம் பிப்ரவரி 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!