
இனியாவது திருமணம் செய்வீர்களா ? - 51 வயது பாலிவுட் நாயகி சொன்ன பதில்
ஆக 07, 2026
Advertisement
பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் கடந்த 25 வருடங்களாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் விஜய் நடித்து 2003ல் ரிலீசான "புதிய கீதை" படத்தில் நடித்திருந்தார். இடையில் 5 வருடங்கள் இடைவெளி விட்டாலும் கூட, கடந்த 2023ல் ஹிந்தியில் சன்னி தியோல் நடிப்பில் வெளியான "கதார் 2" திரைப்படத்தின் வெற்றி இவரை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 51 வயதான இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, "நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த அமிஷா பட்டேல், "ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. நான் தனிமையிலும் சிங்கிளாக இருப்பதிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நேசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் என் அருகில் உள்ளனர். ஒரு புதிய மனிதர் வந்து அந்த சூழலை மாற்றுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்று பதில் அளித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!