
கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர்
ஜூன் 08, 2023
Advertisement
ஹாலிவுட் சினிமாவில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு மற்றும் தனுஷ் நடித்த ராஞ்சனா உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்வாரா பாஸ்கர். இவர் தற்போது மிஸ்ஸஸ் பலானி என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சமூக ஆர்வலரான தனது காதலர் பகத் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்வாரா பாஸ்கர். இந்த நிலையில் தற்போதைய அவர் தான் கர்ப்பமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, எங்கள் குடும்பத்தின் புதிய விருந்தினரை வரவேற்க காத்திருக்கிறோம் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார் .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!