ராமாயணா படம் குறித்த எதிர்மறை ரீல் வீடியோவை லைக் செய்த பிரியங்கா சோப்ரா : அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
நவ 28, 2026
Advertisement
பாலிவுட்டின் பிரம்மாண்ட படைப்பான ராமாயணா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான இப்படம் இதுவரை சுமார் ரூ. 1,800 கோடி வசூலை நெருங்கி உள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளிலும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ராமாயணா படத்தைத் தோல்விப் படம் என்று விமர்சித்து ஒருவர் வெளியிட்ட எதிர்மறையான இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவை நடிகை பிரியங்கா சோப்ரா லைக் செய்துள்ளார். பின்னர், தனக்கு ஆதரவளித்ததற்காக பிரியங்கா சோப்ராவுக்கு நன்றி தெரிவித்து அந்த நபர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்திருந்தார். பிரியங்கா சோப்ராவின் இந்தச் செயல் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராமாயணா படத்தின் வெற்றியைக் கண்டு பிரியங்கா சோப்ரா பொறாமைப்படுவதாகவும், தன்னை ஒரு நட்சத்திரமாக உயர்த்திய திரையுலகையே அவர் அவமதித்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சர்ச்சைக்குப் பிரியங்கா சோப்ரா பதிலளிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…