
பீகாரில் ஆதரவற்ற மாணவர்களுக்கு பள்ளி கட்டிடம் கட்டித்தரும் சோனு சூட்
கடந்த பிப்ரவரி மாதம் பீகாரை சேர்ந்த 27 வயதான பைரேந்திர குமார் என்பவர் தான் பார்த்துவந்த முழுநேர பணியை உதறிவிட்டு வெளியே வந்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை துவங்கி அதற்கு நடிகர் சோனு சூட்டின் பெயரை சூட்டி நடத்தி வருகிறார். இந்த தகவலை கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட சோனு சூட் அவர் தற்காலிக கட்டடத்தில் நடத்தி வந்த அந்த பள்ளிக்கு வருகை தந்து அவரது சேவையை பாராட்டினார்.
பெற்றோர் இல்லாத ஆதரவற்ற கிட்டத்தட்ட 110 மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக அவர் நடத்தி வரும் பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லை என்பதை கவனித்த சோனு சூட் தற்போது இந்த பள்ளிக்கு மிகப்பெரிய கட்டிடம் கட்டித்தருவதற்காக அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். கல்வியை அதிக அளவில் ஏற்றுக்கொள்ள வைப்பது என்பது ஏழ்மைக்கு எதிராக போராடும் முக்கியமான வழிகளில் ஒன்றாகும் என இதுகுறித்து கூறியுள்ளார் நடிகர் சோனு சூட்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!