
ஜூன் 18ல் வித்யாபாலன் படம் ஓடிடியில் ரிலீஸ்
ஜூன் 02, 2021
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, ‛ஜகமே தந்திரம்" படம் நெட்பிளிக்ஸில் இம்மாதம் 18-ந்தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம் ஆங்கில சப்-டைட்டில் உடன் வெளியாகிறது. இந்த நிலையில், அதே ஜூன் 18ல் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்துள்ள ஷெர்னி என்ற படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுகிறார்கள். இப்படத்தை பல சர்வதேச விருதுகளை பெற்ற நியூட்டன் படத்தை இயக்கிய அமித் மசூர்கர் இயக்கியிருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டிருப்பதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 18-ந்தேதி அன்று வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம், வித்யாபாலனின் ஷெர்னி என்ற இரண்டு படங்களுக்குமிடையே ஓடிடி தளத்தில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!