
கேஜிஎப் 2 குறித்து சஞ்சய் தத் நெகிழ்ச்சி பதிவு
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எப்போதும் சில படங்கள் மற்றவைகளை விட சிறப்பாக இருக்கும். அந்த வகையில் எனக்கு கிடைத்த படம்தான் "கேஜிஎஃப் 2". இந்தப் படம் என்னுடைய நடிப்புத் திறமையை எனக்கே மீண்டும் நினைவூட்டியது. இதை நான் இதயத்திலிருந்து உணர்ந்துள்ளேன். இந்தப் படம் முடியும்போது சினிமா என்றால் என்ன என்று எனக்கு புரிய வைத்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், எனக்கும் ஆதிராவை காட்டினார். என்னுடைய கதாபாத்திரம் மிரட்டலாக வந்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் தான் காரணம். ஒரு கேப்டன் போன்று எங்களையெல்லாம் வழிநடத்தினார். குடும்பத்தினரும் ரசிகர்களும் தான் என்னுடைய பலம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!