நடிகையின் பாலியல் புகாரில் 73 வயது இயக்குநர் கைது
ஆக 11, 2026
Advertisement
ஹிந்தி பட உலகில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஷகீல் நூரானி. "படே தில் வாலா" மற்றும் "ஜோரு கா குலாம்" ஆசிட் ஆப் லவ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பல படங்களை தயாரித்தும் உள்ளார்
73 வயதான ஷகீல் நூரானி மீது, 33 வயது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார். மும்பை போலீசில் அவர் அளித்துள்ள புகாரில் “2016-ம் ஆண்டு மும்பை லோகண்ட்வாலாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நூரானியை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக என்னிடம் பேசினார். அதோடு இது குறித்து மேற்கொண்டு பேச தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த படத்தின் திரைக்கதை தொடர்பாக விவாதிக்க நூரானியின் மல்வானி இல்லத்திற்கு சென்றேன். அப்போது நூரானி ஒரு பானத்தைக் குடிக்க சொன்னார், அதைக் குடித்த பிறகு சுயநினைவை இழந்து விட்டேன். அப்போது பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். தனது செல்போனில் இருந்த வீடியோவைக் காண்பித்து, நடந்த சம்பவம் குறித்து போலீஸாரிடமோ அல்லது அல்லது குடும்பத்தினரிடம் தெரிவித்தால் அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்தார். பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி தன்னை பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் நேற்று மும்பை போலீஸார் நூரானியை கைது செய்தனர். பின்னர் போரிவலி விடுமுறைக்கால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நூரானியை 12ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!