
சல்மான்கானின் மாத்ருபூமி ரிலீஸ் போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பு
ஆனால் இன்னும் படம் சென்சாருக்கே அனுப்பப்படவில்லை என்றும், இவை அனைத்தும் வதந்தியே என்றும் படக்குழுவினர் மறுத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், தற்போது இந்த 2026-லேயே இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது என்பதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் இயக்குநர் அபூர்வ லகியாவின் பெயர் விடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, அந்த இடத்தில் இயக்குநரின் பெயருக்குப் பதிலாக "எ பிலிம் பை சல்மான்கான் பிலிம்ஸ்"" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநருக்கும் சல்மான்கானுக்கும் இடையே ஏதாவது பிரச்னையா என்பது குறித்து தற்போது பாலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!