
என் வாழ்க்கை என்னோடு புதைக்கப்படும் : மனம் திறந்த சல்மான்கான்
அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பல காயங்கள் மற்றும் அது போன்ற காரணங்களால் என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பலர் என்னை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் தந்தையர்களின் உடல் தகுதியை, தன்னுடைய உடல் தகுதியுடன் ஒப்பிட்டு, "அவரே இப்படி இருக்கும்போது, உங்களால் ஏன் இருக்க முடியாது?" என்று கேட்கின்றனர். எனவே என் உடல் அமைப்பைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம். இருப்பினும், திரையுலகில் என்னை விடவும் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பவர்கள் பலர் உள்ளனர்.
சிலரது தவறான வழிகாட்டுதலால் எனக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே அது சரியாகி நாங்கள் சுமூகமான உறவில் இருக்கிறோம். அது பற்றி மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
என் வாழ்க்கை பற்றிய பயோபிக் படம் ஒரு போதும் எடுக்கப்படாது. அதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை. என் வாழ்க்கை என்னோடு சேர்த்து புதைக்கப்பட்டு விடும். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…