சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு
மார் 27, 2026
Advertisement
நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு ரசிகர்களிடம் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதல் முறையாக பாலிவுட்டிலும் நுழைந்து ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணா படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார் சாய்பல்லவி.
அதேசமயம் ஹிந்தியில் இன்னொரு பக்கம் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ள ‛ஏக் தின்" படத்திலும் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இருந்து தற்போது க்வாப் டெக்கூன் என்கிற பாடல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மலைத்தொடர் பின்னணியில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ராம் பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாடலை அர்ஜித் சிங் மற்றும் தரன்னும் மாலிக் ஜெய் இருவரும் இணைந்து பாடி உள்ளனர். இந்தப் பாடல் வெளியான 10 மணி நேரத்திலேயே 5 மில்லியன் பார்வைகளையும், ஒருநாளில் 97 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!