
நின்று போன ரித்விகா திருமணம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நீண்டநாள் நண்பர் வினோத் லட்சுமணன் தான் மணமகன். ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதுகுறித்து பின்னர் எந்த தகவல்களும் இல்லை.
தற்போது ரித்விகா யு டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ரித்விகா ரசிகர்களுடன் நேர்காணல் நடத்தினார். அப்போது ஒரு ரசிகர் திருமணம் குறித்து கேட்டதற்கு "திட்டமிட்டப்படி அந்த விஷயங்கள் நடக்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். மற்றொரு ரசிகர் அவரிடம், "நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு, "இல்லை, ஆனால் விரைவில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நம்புகிறேன்" எனப் பேசியிருக்கிறார்.
காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் திருமண நிச்சயதார்த்தம் முறிந்தது உறுதியாகி இருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!