
9 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்ட தணிக்கை குழு: 18 புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு
1952ம் ஆண்டு திரைப்பட சட்டப்படி உருவாக்கப்பட்ட மத்திய தணிக்கை வாரியத்திற்கு தலைவர் மற்றும் 12 முதல் 25 பேர் வரை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு கடைசியாகக் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீரமைக்கப்பட்டது. அப்போதிருந்து செயல்பட்டு வந்த உறுப்பினர்களில் இருவர் காலமான நிலையிலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர்.
தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான அளவில் 18 உறுப்பினர்களைக் கொண்டு தணிக்கைக் குழுவை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது. 18 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, புரோசேன்ஜித் சாட்டர்ஜி, இயக்குநர் பிரியதர்ஷன், இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் மற்றும் சின்னத்திரை நடிகை ரூபாலி கங்குலி ஆகியோர் இதில் அடங்குவர். தென்னிந்திய சினிமாவில் இருந்து இயக்குநர் பிரியதர்ஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 18 புதிய உறுப்பினர்கள் 3 ஆண்டுகள் பதவிக் காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!