ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான்
பிப் 07, 2026
Advertisement
ஹிந்தியில் கடந்த 2006ல் வெளியான படம் ரங்தே பசந்தி. சுதந்திரப் போராட்ட வீரர்களால் ஈர்க்கப்பட்ட இளம் தலைமுறையினர் சிலர் எப்படி தங்களது தியாகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் அமீர்கானுடன் சித்தார்த், ஷர்மான் ஜோஷி, சோகா அலிகான், குணால் கபூர், அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருந்தனர். ஓம் பிரகாஷ் மெஹ்ரா இந்த படத்தை இயக்கியிருந்தார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 ஆண்டு நிறைவடைந்த நிலையில் ரங்தே பசந்தி படக்குழுவினர் அதைக் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் அமீர்கான், சித்தார்த் உள்ளிட்ட படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!