
ஆக்ஷன் நாயகியாக ராகினி திவேதி
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் "ஈமெயில்" என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். முருகா அசோக்குமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஆர்த்தி நடிக்க, இரண்டாவது ஹீரோவாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது, ‛‛ஹீரோயினுக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளோம். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!