
ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா?
ஜூன் 09, 2023
Advertisement
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகள் முன்பே வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். தற்போது ஹாலிவுட் மற்றும் ஹாலிவுட் வெப்சீரிஸ்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுப்பார் என தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!