பிருத்விராஜ் ஹிந்தி டிரைலர் 24 மணி நேர புதிய சாதனை
மே 10, 2022
Advertisement
டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்துள்ள "பிருத்விராஜ்" டிரைலர் நேற்று யு டியூபில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 44 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு "83" படம் பெற்ற 43 மில்லியன் சாதனையை "பிருத்விராஜ்" டிரைலர் முறியடித்துள்ளது.
தெலுங்கு டிரைலருக்கு இதுவரையில் 5 மில்லியன் பார்வைகளும், தமிழ் டிரைலருக்கு 3 மில்லியன் பார்வைகளும் கிடைத்துள்ளன. ஜுன் 3ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஹிந்தியிலிருந்து தமிழ், தெலுங்கிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியாகிறது.
தென்னிந்தியாவிலிருந்து சமீப காலங்களில் ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கின்றன. இந்நிலையில் தமிழ், தெலுங்கில் மட்டும் டப்பிங் ஆகும் இப்படம் ஓரளவிற்கு நல்ல வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதற்கு டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!