
விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட்
பிப் 18, 2026
Advertisement
விஜய் நடிப்பில் கடந்த 2000ல் வெளியான படம் "புதிய கீதை". ஜெகன் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு தற்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ஜாமின் இல்லாத பிடிவாரண்டை பிறப்பிக்கப்பட்டுள்ளது மொரதாபாத் நீதிமன்றம்.
கடந்த 2017ல் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்காக அமீஷா பட்டேலுக்கு 14.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டு முழுத் தொகையும் தரப்பட்டது. ஆனால் குறித்த தேதியில் அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு அவரை ஒப்பந்தம் செய்த விழா ஏற்பாட்டாளர் பவன் வர்மாவிடம் பத்து லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தார் அமீஷா பட்டேல்.
ஆனால் மீதி 4.5 லட்சம் தொகையை அவர் கொடுக்காததால் மொரதாபாத் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார் பவன் வர்மா. ஆனால் ஒவ்வொரு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அமீஷா பட்டேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை தவிர்த்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் விதமாக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள அமீஷா பட்டேல், "இது ரொம்ப ரொம்ப பழைய கதை. பவன் வர்மாவிற்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகையை செட்டில் செய்து விட்டேன். அது குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அப்படி இருந்தும் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் இப்படி வழக்கு தொடர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய வழக்கறிஞர்கள் இது குறித்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!