
மேடே, ரன்வே 34 ஆனது : ஏப்ரல் 29ல் ரிலீஸ்
டிச 03, 2021
Advertisement
பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன், ‛‛யூ மீ ஆர் ஹம், ஷிவாய்"" ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது மூன்றாவதாக இயக்கி உள்ள படத்துக்கு மேடே என்று டைட்டில் வைத்திருந்தார். இதில் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங், பொம்மன் இராணி, அன்ஷா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அஜய் தேவ்கனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துல, தயாரித்துள்ளார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் கடந்த மாதம் வெளிவருவதாக இருந்தது. இப்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ல் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு தற்போது இந்த டைட்டிலை மேடே என்பதற்கு ரன்வே 34 என்றும் மாற்றி உள்ளார் அஜய்தேவ்கான்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!