அமீர் கானை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
ஆக 19, 2024
Advertisement
பாலிவுட்டில் உள்ள உச்ச நடிகர்கள் தமிழ் சினிமா இயக்குனர்களுடன் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாரூக்கான். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ‛சிக்கந்தர்" என்ற படத்தில் நடிக்கிறார். இவர்களுக்கு முன்பாகவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛கஜினி" படத்தில் அமீர் கான் நடித்தார்.
இந்நிலையில் ஆமீர் கான் அடுத்து தமிழில் முன்னனி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. டங்கல் படத்திற்கு பிறகு கடந்த 8 வருடங்களில் ஆமீர் கான் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!