
அடுத்தும் தோல்வியைச் சந்தித்த அக்ஷய்குமார்
2020ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த "காஞ்சனா" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "லட்சுமி" படத்தில் ஆரம்பமான இறங்குமுகம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அதற்குப் பின் அக்ஷய் நடிப்பில் வந்த 12 படங்களில் "சூர்யவன்ஷி, ஓ மை காட்" படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 10 படங்கள் தோல்வியடைந்தது, சில படங்கள் படுதோல்வியடைந்தது. ஓடிடியில் வெளிவந்த "அத்ராங்கி ரே" நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
கடந்த மாதம் வெளியான "சூரரைப் போற்று" ஹிந்தி ரீமேக் படுதோல்வியடைந்த நிலையில், கடந்த வாரம் வெளியான "கேல் கேல் மெய்ன்" படமாவது ஓடிவிடும் என எதிர்பார்த்தார்கள். அந்தப் படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் 25 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷயின் அடுத்த படமாக "ஸ்கை போர்ஸ்" படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!