பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித்
ஜூலை 05, 2022
Advertisement
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான குப்ரா சயித், "சுல்தான், ரெடி அண்ட் சிட்டி ஆப் லைப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். "ஓபன் புக்" என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் சிறுவயதில் இருந்து அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல்களை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். பாலியல் குற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து எதிர் விமர்சனங்களை வரும். இதனால் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!