
வார் 2 படத்தில் இணைந்த கியாரா அத்வானி
ஜூன் 17, 2023
Advertisement
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019 ஆண்டு வெளிவந்து, வரவேற்பை பெற்ற படம் ‛வார்". தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில் முதற்கட்டமாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேடல் பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!