
கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சீரிசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்கனா தனது கருத்தை டுவிட்டரில பதிவு செய்தார். இந்த கருத்து இரு மத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த பதிவை நீக்கினார் கங்கனா.
இந்த நிலையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை தற்காலிமாக முடக்கி வைத்த டுவிட்டர் நிர்வாகம், ""டுவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுந்திரமா வெளியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். என்றாலும் எங்கள் கொள்கைபடி எந் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்"" என்று கூறியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!