ஜவான் - நான்கே நாட்களில் 500 கோடி வசூல்
செப் 11, 2023
Advertisement
அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய்
சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி,
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் "ஜவான்". எப்படிப்பட்ட
விமர்சனம் வந்தாலும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து இந்தியத்
திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
முதல் நாளில் 129 கோடி, இரண்டாம் நாளில் 111 கோடி, மூன்றாம் நாளில் 144 கோடி என மூன்று நாட்களில் 384 கோடி வசூலித்தது என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் சனிக்கிழமை வசூலான 144 கோடி என்பது இதுவரையில் எந்த ஒரு படமும் ஒரே நாளில் வசூலிக்காத ஒரு தொகை.
நேற்று ஞாயிறன்றும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் 136 கோடியைக் கடந்துள்ளது. எனவே, நேற்றைய வசூலையும் சேர்த்து எதிர்பார்த்தபடி நான்கே நாட்களில் இப்படம் 500 கோடியை கடந்து ரூ.520 கோடி வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!