தேவாரா படத்தில் சைப் அலிகான் முதல் பார்வை வெளியீடு
ஆக 16, 2023
Advertisement
"ஆர்.ஆர்.ஆர்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் "தேவாரா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைப் அலிகானின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் பைரா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!