
பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன்
தச்சோளி ஒதேனன் (1964), செம்மீன் (1965), யக்ஷி (1968), கடல்பாலம் (1969), மூலதானம் (1969), வாழ்வே மாயம் (1970), மற்றும் கரகானகடல் (1971) ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள். இவை அனைத்துமே மத்திய மாநில விருதுகள் பெற்றவை. தமிழில் அவர் நடித்த முதல் தமிழ் படம் "ஆளுக்கொரு வீடு".
இதில் சத்யனுடன் டி.ஆர். ராமச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, டி.பாலசுப்ரமணியம், டி.எஸ்.முத்தையா, தாம்பரம் என்.லலிதா, எஸ்.டி. சுப்புலட்சுமி, பி.எஸ். வெங்கடாசலன், டி.ஆர். ராஜாமணி, சி.ஆர்.பாஸ்கரன், பி.சீதாலட்சுமி, ராஜேஸ்வரி பேபி மாலதி, மாஸ்டர் சி.ராஜா மற்றும் ஜாவர் என்.சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.
பிரபல நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான சக்தி கிருஷ்ணசாமியால் எழுதப்பட்டது, சுபாஷ் மூவிஸ் தயாரித்து, பிரபல மலையாள இயக்குனர் எம். கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஸ்வநாதன்--ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர், இந்த படம் தவிர 1967ல் "பேசும் தெய்வம்" என்ற படத்தில் நடித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!