விவேக் ஓபராய்க்கு அபராதம்!
பிப் 21, 2021
Advertisement
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விவேக் ஓபராய். தமிழில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த ஞாயிறன்று, காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் விவேக் ஓபராய் பதிவேற்றம் சென்றிருந்தார். அந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த மும்பை போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். சாந்தாகுரூஸ் போக்குவரத்து போலீசார் இதற்கான ரசீதை அவருக்கு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய். கூடவே தனது தவறை சுட்டிக் காட்டியதற்காக மும்பை போலீசாருக்கு நன்றியும் கூறியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!