
ஷாரூக்கான் பிறந்தநாளில் வெளியானது ‛டன்கி டீசர்
நவ 02, 2023
Advertisement
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாரூக்கான். இந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தலா ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அடுத்து அவரின் "டன்கி" படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. ஷாரூக்கான் உடன் டாப்சி, விக்கி கவுசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கியுள்ளார். ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஷாரூக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு "டன்கி" படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் சாதாரண மனிதனாக ஷாரூக்கான் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!